உழவாரப் பணி என்பது வழிபாட்டு ஆலயங்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது. பொதுவாக சைவ சமயத்திலேயே இச் சொல் பயன்படுத்தப்படுகிறது. . உழவாரப் படை என்பது உழவாரப்பணியில் உதவும் இரும்புக் கருவியாகும். சைவ சமயக்குரவரர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர் கையில் பொற்றாளமும், அப்பர் கையில் உழவாரமும், சுந்தரர் கையில் செங்கோலும், மாணிக்கவாசகர் கையில் திருவாசகமும் இருக்கும். இப்படி சிவபெருமான் நால்வருக்கும் ஓர் அடையாளத்தைத் தந்து, அந்த அடையாளத்தின் மூலம் அவர்கள் செய்த செயற்கரிய செயல்களை உலகறியச் செய்துள்ளார்.
இராசராசர், அப்பர் முதலிய உருவங்களை ஸ்தாபித்ததும் - தானம் செய்ததும்; கி.பி.1017இல் இராஜேந்திரன் மூன்றாம் ஆண்டு, அப்பர் முதலிய 4 உருவங்கள் தானம் செய்துள்ளான் என்ற சான்றுகளும்; அவரின் முட்டிக்கு மேல் வேட்டி, உருத்திராட்ச மாலை, கையில் உழவாரப்படை போன்ற உருவங்கள் வைத்துப் படைத்துள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.
வாசலுக்குக் கொஞ்சம் தள்ளி ஆடு கட்டியிருக்கிறது. பக்கத்தில் ஒரு உழவாரப் பிடியும் கொஞ்சம் புல்லுக்கட்டும். ஆடோ, உழவாரமோ புல்லைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.